Published : 04 Nov 2013 11:15 AM
Last Updated : 04 Nov 2013 11:15 AM

நம்பிக்கைத் துரோகத்தில் உருவானதா ட்விட்டர்?

சமூக இணையதளத்தில் தவிர்க்க முடியாத பெயர் ட்விட்டர்.140 எழுத்து அல்லது குறியீடுகளுக்குள் கருத்தைச் சொல்லும் வசதியைக் கொண்டிருக்கும் இந்தச் சமூக இணையதளம், இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆனால், ட்விட்டரின் ஆரம்பகால நிறுவனர்களில் 14 பேர் அந்நிறுவனத்தில் தற்போது இல்லை. பலரின் கூட்டுமுயற்சியில் உருவான டுவிட்டரின் உருவாக்கத்தில் பல துரோகங்கள் புதைந்திருக்கின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

ட்விட்டர் தளம் உருவான விதம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் நிக் பில்டன் “கருப்பெற்ற டுவிட்டர்: பணம், அதிகாரம், நட்பு, துரோகத்தின் கதை” என்ற பெயரில் புத்தமொன்றை எழுதியுள்ளார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குச் சிலர் உரிமை கொண்டாடிய போதும், ஆரம்பகால நிறுவனர்களுள் ஒருவரான ஜேக் டோர்சே, சான்பிரான்ஸிஸ்கோவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தான்தான் டுவிட்டருக்கான ஆலோசனையைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், நிக் பில்டனின் கருத்து வேறு விதமாக உள்ளது. டோர்சே டுவிட்டர் நிறுவனர் குழுக்களில் முக்கிய உறுப்பினர் என்ற போதும், இது கூட்டுமுயற்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.

டோர்சே பின்னாளில் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

டோர்சே இதுகுறித்து சிபிஎஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நானும் நண்பர்களும் அடுத்து என்ன செய்யலாம், யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விவாதிப்போம். அப்படித்தான் ட்விட்டர் உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் உருவாவதற்கு முன் டுவிட்டரின் ஆரம்பகால நிறுவனர்களும் ஊழியர்களும் ஓடேயோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இணையம் சார்ந்த நிறுவனமான ஓடேயோ தேடு கருவியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு இவான் வில்லியம்ஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர்தான் ட்விட்டரை உருவாக்கினர். ஓடேயோ மூடப்படும் சூழல் உருவானது. ஓடோயோவை 2006 ஆம் ஆண்டு மீட்டெடுத்த வில்லியம்ஸுக்கு டுவிட்டரின் பங்குகளை விற்பனை செய்தது யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மை.

ட்விட்டர் இவ்வளவு உச்சத்தைத் தொடும் என ஆரம்பகால நிறுவனர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ட்விட்டரின் ஆரம்பகால ஊழியர்களில் தற்போது கிறிஸ்டல் டெய்லர் என்பவர் மட்டுமே தற்போதும் பணியாற்றி வருகிறார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குப் பின் ஏராளமான துரோகங்கள் புதைந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x