Published : 18 May 2017 07:06 PM
Last Updated : 18 May 2017 07:06 PM

ஜாதவ் தீர்ப்பினால் ஏற்பட்ட பின்னடைவு: பாகிஸ்தான் ஊடகங்கள் ஏமாற்றம்

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பாகிஸ்தான் ஊடகங்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

அதாவது பாகிஸ்தான் வாதாட்ட உத்தி பலவீனமாகவும், சேதம் விளைவிப்பதாகவும் அமைந்ததாக பிரதான ஊடகங்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

டான் செய்தித்தாள் இணையதளம் இந்தத் தீர்ப்பை “அதிர்ச்சிகரமானது, ஏமாற்றகரமானது” என்று கூறியுள்ளது.

ஓய்வு பெற்ற பாகிஸ்தான் நீதிபதி ஷைக் உஸ்மானி டான் இணையதளத்திற்குக் கூறிய போது, “பாகிஸ்தான் தன் காலிலேயே சுட்டுக் கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பு வாதிட்டிருக்கவே கூடாது.

அரசியல் தலைவர் ஷிரீன் மஜாரியும் சர்வதேச நீதிமன்றம் சென்றது மிகப்பெரிய தவறு என்று கூறினார்.

லண்டனில் உள்ள வழக்கறிஞர் ரஷீத் அஸ்லம் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு வாதாட 90 நிமிடங்கள் கால அவகாசம் இருந்தது. ஆனால் நாம் 40 நிமிடங்கள் விரயம் செய்தோம். எதற்காக நாம் குறைந்த நேரத்தில் நம் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்? கவார் குரேஷி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று கருதுகிறேன்” என்றார்.

இவ்வாறாக பாகிஸ்தானில் அரசியல் தரப்பு, ஊடகத்தரப்பினர் ஜாதவ் தீர்ப்பு தங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வியாகவே கருதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x