மோடிக்கு எதிரான தீர்மானம்
அமெரிக்கவாழ் இந்தியர்கள் எதிர்ப்பு

மோடிக்கு எதிரான தீர்மானம்<br/>அமெரிக்கவாழ் இந்தியர்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமெரிக்காவாழ் இந்தியர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குஜராத் கலவரத்தை மையமாக வைத்து அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்து-அமெரிக்க கூட்டமைப்பு (எச்.ஏ.எப்.) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 80 சதவீத தீவிரவாத தாக்குதல்கள் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பாலும் மீதமுள்ள 20 சதவீதம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளாலும் நடத்தப்படுகின்றன. அக்சர்தாம், புத்த கயா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. மோடிக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று எச்.ஏ.எப். அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப் பின் தலைவர் கண்ணன் சீனிவாசன், ‘மோடிக்கு எதிரான குற்றச்சாட்டு கள் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in