

துபாய் லாட்டரியில் இந்திய டெய்லர் ஒருவர் 2 சொகுசு கார்கள், ரூ.17 லட்சம் ரொக் கம் ஆகியவற்றை பரிசாக வென்றுள்ளார்.
துபாய் ஷாப்பிங் திருவிழாவின் 2-வது நாளில் நடைபெற்ற இன்பினிட்டி மெகா லாட்டரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசலுதீன் குட்டிபலக்கல் (33) வெற்றி பெற்றதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பசலுதீன் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டை வாங்கி வந்தபோதிலும் பரிசு விழவில்லை. அவருக்கு இப்போது குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில் பரிசு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இன்பினிட்டி நிறுவனத்தின் முன்னணி மாடல் களான கியூஎக்ஸ்60 மற்றும் ஜி25 ஆகிய 2 கார்கள் மற்றும் ரூ.17 லட்சம் ரொக்கம் ஆகியவை பசலுதீனுக்கு பரிசாகக் கிடைத் துள்ளது. பசலுதீன் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். ஆண்டுதோறும் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு தனியாக வாங்க முடிவு செய்த அவர், பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்பினார்.
இதுகுறித்து பசலுதீன் கூறுகையில், "இந்த முறை பரிசு கிடைக்கும் என மனம் சொன்னது. பரிசு விழுந்திருப்பதாக தகவல் கிடைத்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது" என்றார். தனக்கு பரிசாகக் கிடைத்துள்ள ரொக்கத்தில் ஒரு பகுதியை, சொந்த ஊருக்கு திரும்பியதும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும் மீதித் தொகையில் வீடு கட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.