

அணுசக்தி விநியோக நாடுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் எந்த வித முன்னுரிமை அளிப்பும் பிராந்திய ஒருமைக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமையும் என்று பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தியாவுக்கு ‘முன்னுரிமை’ அளித்தால் அது பிராந்திய ஒருமைக்கு கேடு விளைவிக்கும் என்பதையே அவர் பெயர் குறிப்பிடாமல் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாஷ்கண்ட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கிடையே சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்த பாகிஸ்தான் அதிபர் ஹுசைன் பாகிஸ்தானையும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள ஆலோசனை நடத்தியுள்ளார்.
அணுப்பாதுகாப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முயற்சிகளைச் சுட்டிக்காட்டி அவர் பாகிஸ்தான் என்.எஸ்.ஜியில் இணைவதற்கான வலுவான காரணங்களை சீன அதிபரிடத்தில் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளில் பாகிஸ்தானை உறுப்பினராக இணையச் செய்ததற்கு சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.