

பாகிஸ்தானில் திருமண கோஷ்டி யினர் சென்ற வாகனம் ஒன்று வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 26 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
பாகிஸ்தானில் பருவ மழை இம் மாத தொடக்கத்திலேயே கடுமை யாக பெய்யத் தொடங்கிவிட்டது. கைபர் பாக்தன்க்வா மற்றும் மத்திய பஞ்சாப் மாகாணங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைபர் பழங்குடி மாவட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்த வாகனத்தில் பயணம் செய்த 26 பேரும் பலியானதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப் பட்டதாகவும் மாவட்ட நிர்வாக அதிகாரி ரஹிமுல்லா மேஷத் தெரிவித்தார்.