

சிங்கப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 200 தொழிலாளர்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கும் நோட்டீஸ்களை அளித்துள்ளனர்.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8-ம் தேதி பஸ் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு உயிரிழந்தார்.
இதை கண்டித்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 39 காவலர்கள் காயமடைந்தனர். 16 வாகனங்கள் சேதமடைந்தன.
கலவரத்தில் ஈடுபட்டு கடும் சேதம் விளைவித்ததாக 28 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் தீவிரமாக பங்கேற்ற தாக போலீஸார் குற்றம் சாட்டிய 56 இந்தியர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
போலீஸார் அறிவுரை
இந்நிலையில் கலவரத்தில் தீவிரமாக பங்கேற்காமல் ஒதுங்கியிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 200 தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த 200 தொழிலாளர்களையும் நேரில் வந்து அறிவுறுத்தலைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தி ருந்தனர். அதன்படி, போலீஸ் கன்டோன்மென்ட் வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தொழிலாளர்கள் வந்திருந்தனர்.
இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் சட்ட ரீதியாக சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து அந்த தொழிலாளர்களுக்கு வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் எச்சரிக்கும் விதமாக இந்த அறிவுரை வழங்கும் பணியை போலீஸார் மேற்கொண்டனர்.
“இது போன்று போலீ ஸாரிடம் அறிவுரை பெற்ற வர்கள் அனைவரும் சிங்கப்பூரில் தங்கி, பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இந்த அறிவுரை வழங்கும் நடைமுறையின்போது தொழிலா ளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்களும் உடன் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தியிருந்தோம்.” என்று காவல் ஆணையாளர் ஜு ஹீ கூறியதாக ‘தி ஸ்டெரய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.