

தீவிரவாத அமைப்புகளை எதிர்த் துப் போரிடுவதைவிட, பாகிஸ்தானு டன் நட்பு வைத்துக் கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஆப்கனில் நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலில் 80 பேர் பலியாயினர். இந்நிலையில், தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அஷ்ரப் கனி அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அத்துடன் அவர்க ளுக்கு பயிற்சியும் வழங்குகிறது. இதனால், அல்காய்தா மற்றும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போரிடு வதைவிட, பாகிஸ்தானுடன் உறவு வைத்துக் கொள்வது மிகப்பெரிய சவாலானதாக உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தெரீக்-இ-பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பஸ்லுல்லா மீது ஆப்கன் ராணுவம் 11 முறை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
ஆனால் ஆப்கனைச் சேர்ந்த ஹக்கானி இயக்கத்தினருக்கு எதி ராகவோ, பாகிஸ்தான் பாஸ்போர்ட் உடன் உலவிய தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் முல்லா ஒமர், முல்லா மன்சூருக்கு எதி ராகவோ ஒரு முறையாவது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதா?
ஆப்கானிஸ்தானில் காயம டைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ் தானில் சிகிச்சை அளிக்கப்படு கிறது. ஆப்கன் தீவிரவாதிகள் இஸ்லாமாபாத்தில் வெளிப்படை யாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானை நாங்கள் நம்ப மாட்டோம். இந்தியாவுடன் நட்பு வைத்துக்கொள்வதில் பெருமைப் படுகிறோம். ஏனெனில், ஆப்கனில் ஜனநாயகம் தழைக்க தேவையான உதவியை அந்த நாடு செய்து வருகிறது. குறிப்பாக இங்கு அணைகளை இந்தியா கட்டிக் கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.