

அமெரிக்காவில் 'துர்நாற்றம் மிகுந்த ஷூ' என்ற தலைப்பில் நடைபெறும் 42-வது சர்வதேச போட்டியில் சிறுவன் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
12 வயதான கானர் ஸ்லோகாபே என்ற 12 வயது சிறுவன் துர்நாற்றம் வீசும் ஷூவை அணிந்துகொண்டிருப்பவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 7 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றது குறித்து கானர் கூறும்போது, ''நான் என் அத்தைக்கு பண்ணை வேலைகளின்போது உதவி புரிவேன். அப்போது பண்ணையில் உள்ள கால்நடைக் கழிவுகள் பட்டு என் ஷூ-வை அசுத்தப்படுத்திக்கொள்ள நேர்ந்தது" என்றார்.
நாசாவின் வேதியியல் நிபுணர் ஜார்ஜ் அல்டிரிச் கூறும்போது, "இம்மாதிரியான துர்நாற்றம் நமது கண்களில் கண்ணீரையே வரவழைக்கும். இம்மாதிரியான துர்நாற்றம் மிக்க ஷு களை வெறுங்காலுடன் அணிந்து சென்றாலோ, சேற்றில் நடந்து சென்றாலோ மேலும் கடுமையாக துர்நாற்றம் வீசக்கூடியவை" என்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற கானருக்கு 2,500 அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
ஏ வெர்மண்ட் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிறுவனம் 1974 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. தங்களது நிறுவனம் சார்ந்த புதிய தயாரிப்பு காலணிகளின் விற்பனையைக் கூட்ட 'வெர்மண்ட் ஷூ நிறுவனம்' வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இத்தகைய போட்டிகளை நடத்திவருகிறது.