லாரன்ஸ் ஆப் அரேபியா நடிகர் பீட்டர் ஓ டூல் காலமானார்
அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர் பீட்டர் ஓ டூல் (81) திங்கள்கிழமை காலமானார்.
லாரன்ஸ் ஆப் அரேபியா திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக 1962 ஆம் ஆண்டு அகாதெமி விருது பெற்றார். லாரன்ஸ் அத் திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப் பெற்றார். இவர் எட்டு முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர் என்ற பெருமை பெற்றவர். ஆனால், ஒருமுறை கூட ஆஸ்கர் பெறவில்லை. இதுவும் ஒருவகை சாதனையாகும்.
பீட்டர் ஓ டூல் நான்கு கோல்டன் குளோப் விருதுகள், தலா ஒரு பாப்டா (பிஏஎஃப்டிஏ), எம்மி, கௌரவ அகாதெமி விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடக்க காலத்தில் கொஞ்சகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றிய டூல், பின்னர் இங்கிலாந்து கடற்படையில் ரேடியோமேனாகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிறந்த நாடகக் கலைஞரும் கூட.
டூலின் மறைவுக்கு அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
