Last Updated : 28 Jan, 2017 10:47 AM

 

Published : 28 Jan 2017 10:47 AM
Last Updated : 28 Jan 2017 10:47 AM

ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு விருது

மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கிய, 3 இந்திய வம்சா வளியினருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் ‘ஆஸ்திரேலிய தினம்’ கொண்டாடப்பட்டது. இதை முன் னிட்டு சமூகத்துக்குப் பல துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப் பட்டனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்.

சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் புருஷோத்தமன் சாவ்ரிகருக்கு, 2017-ம் ஆண்டு பொதுப் பிரிவில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா மெடல்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியர் இந்தியர் மருத்துவ பட்டதாரி கள் சங்கத் தலைவராக புருஷோத்தமன் பொறுப்பு வகித்தவர். அத்துடன் ‘ஆகாஷ் வாணி சிட்னி’ என்ற சமூக வானொலியை நிறுவியவர்.

அதேபோல், பெர்த் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத் துவர் மக்கான் சிங் கான்குரேவுக்கும் விருது வழங்கப்பட்டது. நியூரோ ரேடியாலஜி, மருத்துவக் கல்வி உட்பட பல துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மக்கான் சிங்குக்கு விருது வழங்கப்பட்டது.

சிட்னியைச் சேர்ந்த விஜய் குமாருக்கு விருது வழங்கப்பட்டது. இவர் மருத்துவத் துறையில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணி களில் சிறப்பாக பங்காற்றியதற் காக கவுரவிக்கப்பட்டார். இவர் நியூக்ளியர் மெடிசின் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சிட்னி தமிழ் சங்க நிறுவனர்களில் இவரும் ஒருவர். இவருடைய ஆராய்ச்சிகளுக்காக கடந்த 2007 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ‘ஆஸ்திரேலியன் நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ நிறுவனம் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

தவிர டார்வெய்னைச் சேர்ந்த தேஜேந்திர பால் சிங் என்பவர், ஏழைகளுக்கு பல ஆண்டுகளாக உணவு வழங்கி வரும் பணியை செய்துவருகிறார். அதற்காக உள்ளூர் ஹீரோ விருது பிரிவில், இறுதி பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தவிர இந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவின் மிக உயரிய விருது பெறு வதற்கு 950 ஆஸ்திரேலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x