தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி பயணித்த ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி ரயிலில் பயணம்

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி பயணித்த ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி ரயிலில் பயணம்
Updated on
1 min read

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியை நிறவெறி காரணமாக வெள்ளையர்கள் நடுவழியில் இறக்கிவிட்ட ரயில் நிலையத்துக்கு நேற்று ரயிலில் பயணம் செய்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவல கத்தின் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி பென்ட்ரிச் ரயில் நிலையத்திலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்துக்கு (15 கி.மீ.), காந்தி பயணம் செய்தது போன்ற ரயிலில் பயணம் செய்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

காந்தியை நடுவழியில் இறக் கிவிட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தை மோடி பார்வை யிட்டார். பின்னர் அந்த ரயில் நிலை யத்தில் காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண் காட்சியையும் மோடி தொடங்கி வைத்தார். நிறவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த காந்தி, கடந்த 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி டர்பன் நகரிலிருந்து பிரிடோரியாவுக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறி 3-ம் வகுப்பில் பயணிக்குமாறு காந்தியை வெள்ளையர்கள் கேட்டுக்கொண்டனர்.

தான் முதல் வகுப்புக்கான டிக்கெட் வைத்திருப்பதாகக் கூறி, இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தியை பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப் பட்டார்.

இந்த சம்பவத்தால் கொதித் தெழுந்த காந்தி, தென்னாப் பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகவும் அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட கருப் பின மக்களுக்கு ஆதரவாகவும் அகிம்சை வழியில் போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டம் தான் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்கும் வித்திட்டது.

முன்னதாக, நேற்றுமுன்தினம் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தி மற்றும் தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத் தினர். பின்னர் அங்கு வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்துப் பேசினார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in