வாட்டிகன் நிர்வாக சீர்திருத்தம்: கார்டினல் குழு ஆலோசனை

வாட்டிகன் நிர்வாக சீர்திருத்தம்: கார்டினல் குழு ஆலோசனை
Updated on
1 min read

வாட்டிகன் நகரின் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட கார்டினல் கவுன்சில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட வாட்டிகன் நிர்வாக அமைப்பையும் நிதி நிர்வாகத்தையும் மாற்றி அமைப்பது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க கார்டினல் கவுன்சிலை போப் பிரான்ஸிஸ் நியமித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, சிலி, காங்கோ ஜனநாயக குடியரசு, ஜெர்மனி, ஹோண்டுராஸ், இந்தியா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த கார்டினல்கள் இந்த கவுன்சிலில் இடம்பெற்றுள்ளார்கள். இந்த கார்டினல் கவுன்சிலின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

இந்நிலையில் இந்த கவுன்சிலின் சமீபத்திய கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. வழக்கமாக போப் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டம் இம்முறை வாட்டிகன் நகரின் புனித மார்த்தா இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கார்டினல்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

வாட்டிகன் வங்கியை சீரமைப்பது தொடர்பாக நிபுணர் குழுவை போப் பிரான்சிஸ் நியமித்திருந்தார். இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை கார்டினல் கவுன்சில் செவ்வாய்க்கிழமை விவாதித்தது. இந்நிலையில் புதன்கிழமை வாட்டிகன் நிர்வாக மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து இந்த கவுன்சில் விவாதித்ததாக வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in