சர்ச்சைக்குரிய தீவு: பேச்சு நடத்த சீனா, தென்கொரியாவுக்கு ஜப்பான் அழைப்பு

சர்ச்சைக்குரிய தீவு: பேச்சு நடத்த   சீனா, தென்கொரியாவுக்கு ஜப்பான் அழைப்பு
Updated on
1 min read

தீவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிப்படையான பேச்சு வார்த்தைக்கு முன்வருமாறு சீனா மற்றும் தென்கொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள சில தீவுகளுக்கு ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.

ஜப்பான் பிரதமர் அபே, சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியா அதிபர் பார்க் கியூன்-ஹை ஆகிய மூவருமே கடந்த ஓராண்டுக்குள் இந்தப் பதவிக்கு வந்தனர். ஆனால் தீவுப் பிரச்சினை தொடர்பான கருத்து மோதலால் இந்த மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவில்லை.

இந்நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் யாசுகுனி கோயிலுக்கு அபே கடந்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இதற்கு சீனா மற்றும் தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தன. ஏனெனில், போரின்போது தங்கள் நாட்டு மக்களை கொன்று குவித்தவர்களை தியாகிகளாக ஜப்பான் கருதுவதாகவும், தங்கள் மீதான அடக்குமுறையின் நினைவுச் சின்னமாக யாசுகுனி கோயிலை கருதுவதாகவும் சீனாவும் தென்கொரியாவும் குற் றம்சாட்டி வருகின்றன. தனது பயணத்தை நியா யப்படுத்தும் வகையில், அரசுக்கு சொந்தமான என்எச்கே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அபே கூறியதாவது: போருக்கு எதிரான உறுதிமொழி எடுப்பதற்குத்தான் நான் யாசுகுனி கோயிலுக்குச் சென்றேன்.

உலகில் உள்ள மற்ற தலைவர் களைப் போலதான் நானும் தாய் நாட்டுக்காக போரில் உயிரிழந் தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றேன். தீவுப் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த சீனாவும், தென்கொரியாவும் முன்வர வேண்டும் என்றார்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட தலைவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவும் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in