ஒளி மாசால் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் இரவில் பால்வீதியை பார்க்க முடியாது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ஒளி மாசால் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் இரவில் பால்வீதியை பார்க்க முடியாது: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
Updated on
1 min read

ஒளி மாசு காரணமாக இரவு நேரங் களில் விண்ணில் உள்ள பால் வீதியை மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் காண முடிவதில்லை என விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

இத்தாலியில் ஒளிமாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் முக்கிய விஞ் ஞானியான ஃபேபியோ பல்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன் செயற்கை விளக்குகளால் ஒளிரும் இரவு நேர வானத்தை கொண்ட முதல் உலக வரைபடத்தை உருவாக் கினார். தற்போது அதை மேம் படுத்தி அனைத்து நாடுகளின் மக்கள் தொகை, நிலப்பரப்பு மற்றும் ஒளிமாசு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஹெச். டி உலக வரைபடத்தை உருவாக்கி யுள்ளார்.

செயற்கை விளக்குகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வுக்கு ஃபேபியோவின் வரைபடம் உறுதுணையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வரைபடம் மூலம் எதிர்காலத்தில் ஒளிமாசு உயருமா அல்லது குறையுமா என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஒளிமாசு விண்வெளி ஆய்வாளர் களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் வெறும் கண்களால் விண்ணை நோக்கும் சாதாரண மனிதர்களுக்கு நிச்சயம் இயற்கையின் படைப்பை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இரவு நேரத்தில் வானின் ஒளி சிறிது அதிகரித்தாலும் பால் வீதியை பார்ப்பது மனிதர்களுக்கு கடினமாகிவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

காற்று, புகை மாசு வரிசையில் ஒளிமாசும் உலகளாவிய கவனத் தை தற்போது பெற்று வருகிறது. பிற மாசுகளை விட, செயற்கை விளக்கொளி மாசு குறைவானது தான். எனினும் ஃபேபியோ உருவாக்கிய வரைபடம் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் தெளிந்த வானம் 99 சதவீதம் வரை ஒளிமாசு அடைந்திருப்பதை காணமுடிகிறது.

சிங்கப்பூர் போன்ற உலகின் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த ஒளிமாசின் அளவு மிக அதிகமாக இருப்பதால் உண்மையான இரவு நேரத்தை மக்களால் அனு பவிக்க முடிவதில்லை என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித் துள்ளனர். இருளை கிழிக்கும் செயற்கை விளக்கொளியில் இருந்து எழும்பும் மாசுதான் இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதே போல் மத்திய ஆப்பிரிக்க நாடுகள், மடகாஸ்கர் ஆகிய பகுதிகள் ஒளிமாசால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு என்பதுதான் வேடிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in