அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன: வடகொரியாவுக்கு எச்சரிக்கை

அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன: வடகொரியாவுக்கு எச்சரிக்கை
Updated on
1 min read

அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-1பி ரக அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பப்பட் டன. இதன்மூலம் வடகொரியா வுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி 5-வது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாகும். அடுத்ததாக 6-வது அணுகுண்டு சோதனையையும் நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது.

‘வடகொரியாவின் இறையாண் மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தென்கொரியா, அமெரிக்கா மீது அணுகுண்டுகளை வீச தயங் கமாட்டோம்’ என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக் கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக் காவின் பி-1பி ரகத்தைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் நேற்று தென்கொரியாவுக்கு அனுப்பப் பட்டன. அந்த விமானங்களுக்குப் பாதுகாப்பாக தென்கொரிய விமானப் படையைச் சேர்ந்த 4 போர் விமானங்களும் அமெரிக் காவின் 4 போர் விமானங்களும் வானில் சீறிப் பாய்ந்து சென்றன.

‘வடகொரியா மீது அணுகுண் டுகளை வீசத் தயங்கமாட்டோம் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன’ என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

பி-1பி ரக போர் விமானங்கள் 30 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 900 மைல் வேகத்தில் பறக்கக்கூடியவை. சுமார் 37.5 டன் எடையுள்ள வெடிமருந்து களைச் சுமந்து செல்லும் திறன் படைத்தவை. இவை தென்கொ ரியாவின் ஓசான் விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க பாது காப்பு வட்டாரங்கள் கூறியபோ து, வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளால் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானின் பாது காப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட் டுள்ளன, அதை எதிர்கொள்ளும் வகையில் பி-1பி ரக போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in