எனக்கு வேதனையான காலம்- பிரான்ஸ் அதிபர் பேட்டி

எனக்கு வேதனையான காலம்- பிரான்ஸ் அதிபர் பேட்டி
Updated on
1 min read

எனக்கு வேதனையான காலம் இது என்று ஒப்புக்கொண்டுள்ளார் பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்த் (59)

தனது நீண்ட கால சிநேகிதி வேலரி டிரயர் வைலருக்கு (48) தெரியாமல் புதிதாக ஒரு நடிகையுடன் ஹொலாந்த் ரகசியமாக உறவு வைத்துள்ளதாக அம்பலமான செய்தி அவரை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தான் முழுமை யாக நம்பிய ஹொலாந்த், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்து வேலரி, மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை விட 18 வயது குறைவான கறுப்பின நடிகை ஜூலி கேயட்டுடன் ஹொலாந்துக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் ஹொலாந்துக்கும் வேலரிக்கும் இடையேயான நெருக்கம் முன்பு போலவே தொடருமா என்பது தெரியவில்லை.

அடுத்த மாதம் வாஷிங்டன் செல்லும்போது ஹொலாந்துடன் வேலரி செல்வாரா என்பது கேள்விக்குறியாகி விட்டது. அந்த பயணத்தின்போது அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷேல் ஒபாமாவின் விருந்தினராக ஹொலாந்த், வேலரி ஆகியோர் வெள்ளை மாளிகையில் ஒரு நாள் இரவு தங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

தனது தனிப்பட்ட விவகாரங் கள் பற்றி நிருபர்களிடம் எலிசீ அரண்மனையில் பேட்டி அளித் தார் ஹொலாந்த்.

பிரான்ஸின் முதல் பெண்மணி யாக வேலரி டிரயர் வைலர் நீடிக்கிறாரா என்று கேட்டதற்கு உங்கள் கேள்வி புரிகிறது. எனது பதிலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அவர வர் தனிப்பட்ட வாழ்வில் சோத னைமிக்க காலங்கள் வரும். இப்போது எனக்கு அத்தகைய வேதனை காலம் வந்துள்ளது.

எனக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. தனிப்பட்ட விவகாரங்களை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்வேன். இப்போது அதற்கு உகந்த காலமோ இடமோ இல்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை என்றார்.

அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு ஹொலாந்தும் கேயட்டும் தனித்தனியாக வருவதை படம் பிடித்து அந்த படங்களை குளோசர் பத்திரிகை வெளியிட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேலரி டிரயர் வைலர் மன உளைச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.

முன்னாள் பத்திரிகையா ளரான வேலரி டிரயர் வைலர் ரத்தம் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலிருந்து வேலரி வீடு திரும்ப மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் அவருக்கு இன்னும் ஓய்வுதேவை என்றும் டாக்டர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டிலிருந்து தனது சிநேகிதியாக இருந்த டிரயர் வைலருடுடன் இன்னும் நட்பு இருக்கிறதா இ்ல்லையா என்பதை உடனடியாக தெரிவிப்பது கட்டாயம் என்று நண்பர்களும் அரசியல் வட்டாரங்களும் ஹொலாந்துக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in