சோனியா விவகாரம்: சீக்கியர் அமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு

சோனியா விவகாரம்: சீக்கியர் அமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு
Updated on
1 min read

டெல்லியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக தன் மீது தொடுக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் சொல்ல கூடுதல் அவகாசம் தரும்படி சீக்கிய உரிமைகள் குழு விடுத்த கோரிக்கையை நியூயார்க்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று நிராகரித்தது.

சோனியா தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய 21 நாள் கூடுதல் அவகாசம் தரும்படி ‘சீக்கியர்களுக்கு நீதி அமைப்பு’ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனுவை மன்ஹாட்டன் மத்திய நீதிமன்ற நீதிபதி பிரியன் கோகன் தள்ளுபடி செய்தார்.

2013 ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதிக்கும் 9ம் தேதிக்கும் இடைப் பட்ட காலத்தில் நியூயார்க்கில் சோனியா இருந்தாரா என்பதை விசாரித்து தகவல் சொல்வதற்கும், தனக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சோனியா தாக்கல் செய்த மனுவை ஆட்சேபித்து வழக்கு தொடுக்கவும் சீக்கியர் அமைப்புக்கு பிப்ரவரி 6 வரை அவகாசம் கொடுத்திருந்தது நீதிமன்றம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in