

கொலம்பியாவில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 பேர் பலியாயினர். 16 பேர் காயமடைந்தனர்.
கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடிலின் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மையத்தால் போதைப் பொருள் விற்பனை பாதிக்கப்படும் என்பதால் போதைப் பொருள் கடத்தல்காரர்கள்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருப்பார்கள் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த போதை மறுவாழ்வு மையம் சில வாரங்களுக்கு முன்புதான் மெடிலின் நகர மேயரால் திறந்து வைக்கப்பட்டது.