அதிபராக தகுதியற்றவர் டொனால்டு டிரம்ப்: அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் விமர்சனம்

அதிபராக தகுதியற்றவர் டொனால்டு டிரம்ப்: அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் விமர்சனம்
Updated on
1 min read

வெள்ளை மாளிகைக்குள் நுழை வதற்கு குடியரசு கட்சி வேட் பாளர் டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக இரு வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்ததால் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர், அவருக்கு மக்கள் ஆதரவளிக்கக் கூடாது என ஹிலாரி கிளிண்டன் பேசி வருகிறார். அண்மையில் நிமோனியா காய்ச் சலால் அவதிப்பட்டு மயங்கி விழுந்த ஹிலாரியைப் பாதுகாவ லர்கள் மருத்துவமனையில் அனு மதித்தனர். தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர் கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பிலடெல்பியா வில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிலாரியை ஆதரித்து அதிபர் ஒபாமா பேசியதாவது:

வெள்ளை மாளிகையில் எனக்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன் அமர்வது தான் அமெரிக்காவுக்கு நல்லது. நமது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஹிலாரி கிளிண்டனுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். ஜனநாயகமும், அதிபர் பதவிக்கான தேர்தலும் ரியாலிட்டி ‘டிவி’ நிகழ்ச்சியோ, பார்வையாளர்கள் விளையாடும் விளையாட்டோ அல்ல.

ஆமாம், அவரால் முடியும் என்பது அமெரிக்கா அல்ல. நம்மால் முடியும். நம்மால் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். பாதுகாப்பான சாலை களை உருவாக்க முடியும். பாது காப்பு நிறைந்த உலகத்தை உரு வாக்க முடியும் என்பது தான் அமெரிக்கா. உண்மையான மாற்றத்தையும், வளர்ச்சியையும் நாம் கொண்டு வரவேண்டும்.

இந்தப் பணிகளை எனக்குப் பின் ஹிலாரி சிறப்பாக செய்து முடிப் பார். எனவே தான் நான் அவ ருக்கு ஆதரவாக இருக்கிறேன்.

டிரம்ப் எவ்வித திட்டமும் இல் லாதவர். தன்னை ஒரு தொழில திபர் என அழைத்துக் கொள்பவர். அமெரிக்காவில் ஏற்கெனவே ஏராளமான தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அதனால், அவரைப் போன்றவர் நமக்குத் தேவையில்லை. சொல்லப் போனால் பல தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்வதும், ஊழியர் களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும் ஏமாற்றும் பேர் வழிகளாகத் தான் இருக்கின்றனர்.

உழைப்பாளிகள் பற்றி கடந்த 70 ஆண்டுகளாக எந்த கவலையும் இல்லாத டிரம்ப் திடீரென ஒருநாள் மக்களின் சாம்பியனாக பார்க்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வெள்ளை மாளிகைக்குள் நுழைய அவர் சிறி தும் தகுதியற்றவர். எனவே மக்கள் தேர்தலில் சிந்தித்து செயல் பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in