Published : 16 Oct 2014 10:22 AM
Last Updated : 16 Oct 2014 10:22 AM

சமூக நலத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம்

மதுரையில் வசிப்பவர் ஜோதி காந்தி. இலங்கை அகதியான இவர், 1973-ல் தமிழகம் வந்தார். இவர் இலங்கையில் ஜி.சி.இ. படித்துள்ளார். இப்படிப்பு பழைய எஸ்எஸ்எல்சி படிப்புக்கு இணையா னது. மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜோதிகாந்தி பதிவு செய்திருந்தார். இந்நிலையில், அவருக்கு மதுரை சமூக நலத்துறை அலுவலகத்தில் 1981-ல் உதவியாளர் பணி கிடைத் தது. 1982-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். 1992-ல் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். இரண்டே மாதத்தில் இளநிலை உதவியாளர் பணிக்குரிய போதிய கல்வித் தகுதி பெறவில்லை எனக்கூறி அலுவலக உதவியாளராக பணியிறக்கம் செய்யப்பட்டார்.

2010-ல் மீண்டும் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் அலுவலக உதவியாளராகவும், 3 ஆண்டு இளநிலை உதவியாள ராகவும் பணிபுரிந்த ஜோதிகாந்தி, 2013 மார்ச் 31-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் கல்வித் தகுதி சர்ச்சையால் அவருக் குரிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப் படவில்லை. இதையடுத்து ஓய்வூதிய பலன்கள் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் நிபந்தனையின் பேரில் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள் ளார். கல்விச் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையேற்று கல்விச் சான்றிதழ்களை தாக்கல் செய்துள்ளார். அவர் இலங்கையில் படித்த படிப்பு, தமிழகத்தில் உள்ள பழைய எஸ்எஸ்எல்சி படிப்புக்கு இணையானது என மதுரை மாவட்ட கல்வி அதிகாரியும் அறிவித் துள்ளார். அதன்பிறகும் மனுதாரருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்காதது நியாயமற்றது.

மனுதாரருக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவர் விவரிக்க முடியாத வேதனையில் உள்ளார். வறுமை யில் வாடுகிறார். பல முறை மனு கொடுத்தும் ஓய்வூதிய பலன்களை அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே, மனுதாரருக்கு ஓய்வூதிய பலன்களை 12 சதவீத வட்டியுடன் 6 வாரத்தில் வழங்க வேண்டும். மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை. இருப்பினும் அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க மறுத்துள் ளனர்.

இதற்காக சமூகநலத்துறை இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தப்பணத்தை மனுதாரரிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x