மகளைப் பலாத்காரம் செய்தவனின் மூக்கு, காதை அறுத்த பெற்றோர்

மகளைப் பலாத்காரம் செய்தவனின் மூக்கு, காதை அறுத்த பெற்றோர்
Updated on
1 min read

தங்களின் மகளைப் பாலியல் வன்கொடுமை புரிந்தவனை வீட்டுக்கு அழைத்து அவனின் மூக்கையும், காதுகளையும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அறுத்தெறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தலிபான்களைத் துரத்தியடித்தன. அதன்பிறகு, அமெரிக்காவின் ஆதரவோடு ஹமீது கர்சாயின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்சாயின் ஆட்சி முடிவுக்கு வர அதிபர் தேர்தலும் நடைபெற்றது.

இன்னும் சில வாரங்களில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் சில ஆண்டுகளாக அடைந்துள்ள உரிமைகள் மீண்டும் பறிக்கப்படுமோ என்று அச்சத்தில் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு சம்பவமாக, தங் களின் 14 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை புரிந்த வனை இரவு விருந்திற்கு வீட்டுக்கு அழைத்து அவனின் காதுகளையும், மூக்கையும் அவளின் தந்தை அப்துல் கஹார் மற்றும் தாய் சுல்தானா ஆகியோர் அறுத்தெறிந்துள்ளனர்.

ஆனால் மூக்கறுபட்ட அந்த நபரோ தான் எந்தக் குற்றமும் செய்யாதவன் என்கிறார். ஆப்கானிஸ்தானில் அரசிய லமைப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், இஸ்லாமியர்கள் பலரும் தங்களின் மதச் சட்டங் களின்படியே நடந்து கொள் கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in