

இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே.
காமன்வெல்த் உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், நிருபர்களை வியாழக் கிழமை சந்தித்து அதிபர் பேசினார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009ல் நடந்த இறுதிக் கட்டப்போரின் போது இலங்கை ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அப்பாவி பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் எழும் புகார்களே இந்த கூட்டத்தில் பெரிதாக இடம்பெற்றன. புகார்
களை திட்டவட்டமாக மறுத்த ராஜபக்சே, தங்களிடம் மறைப்ப தற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அவர்களுடன் பேசித் தீர்வு காண தயாராக இருக்கிறேன். அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றார்.
மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றங்கள் தொடர்பான புகார்கள் நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.
மனித உரிமைகள் ஆணையம், போர் படிப்பினை மற்றும் புனர
மைப்பு ஆணையம் என சட்டபூர்வ அமைப்பு இருக்கிறது. போரின் போது சித்திரவதை, பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடுமைகள் நடந்தது என்றால் அந்த அமைப்புகளிடம் புகார் சொல்லலாம் என்றார்.
குர்ஷித் வந்துள்ளது திருப்தி
இந்தியாவிலிருந்து வெளியுற வுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வந்துள்ளது திருப்தி அளிக் கிறதா என்று கேட்டதற்கு ‘திருப்தி’ என்றார் ராஜபக்சே.
இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் செல்லக்கூடாது என தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒருமித்த கருத்துக்கு மதிப்பளித்தே காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு அவர் வரவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி. நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘அப்படி அவர் என்னிடம் கூறவில்லை’ என்றார்.
கொழும்புக்கு பிரதமர் செல்ல வேண்டாம் என காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு எடுத்த பிறகு தன்னால் வர இயலாது என தெரிவித்து ராஜபக்சேவுக்கு பிரதமர் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியே அதிபர் மேற்சொன்ன பதிலை கூறியுள்ளார்,
இன்னொரு கேள்விக்கு பதில் சொன்ன ராஜபக்சே, ஆஸ்திரே லியாவின் பெர்த் நகரில் முந்தைய முறை நடந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வந்திருக்கிறார் என்பது எனக்கு திருப்தி தருகிறது என்றார்.
இந்த செய்தியாளர்கள் கூட்டம் சற்று அதிரடியாகவே தொடங்கியது.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் நிருபர், ‘ராஜபக்சேயை சந்திக்கும்போது சில சங்கடமான கேள்விகளை கேட்கப்போகிறேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறாரே,’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ‘டேவிட் கேமரூனுடன் நான் சந்தித்துப் பேச இருக்கி றேன். அதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் அவரை சந்திக்கும்போது நானும் அவரிடம் சில கேள்விகளை கேட்கத் தயாராக இருக்கிறேன்’ என்றார் ராஜபக்சே.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு கேள்வியைத் தவிர மற்ற எல்லாமே புலிகளுக்கு எதிரான போர் குறித்தும் அந்த போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை சார்ந்ததாகவுமே இருந்தது.
பயங்கரவாதத்தை ஒடுக்கியது மற்றும் இலங்கையில் திரும்பி யுள்ள அமைதி தொடர்பான கேள்விகளுக்கு அதிபர் சற்று காட்டமாகவே பதிலளித்தார். ஜெனிவாவில் பணி யாற்றிவரும் இலங்கை நிருபர் ஒருவர் அதிபரிடம், உலகின் மிக கொடிய பயங்கரவாத அமைப்பை இலங்கையிலிருந்து ஒடுக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆயினும் மேலைநாடு களின் தலைநகரங்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரசாரத்திலிருந்து எப்படி காப் பாற்றப் போகிறீர்கள் என்ற கேட்டார்.
அதற்கு அதிபர், ‘அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் சொல்வதை கேட்கத்தயாராக இருக்கிறோம். விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டி ருக்கிறார்கள். அவர்களின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்.
பொதுமக்களை கொன்றதாகவும் பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்ததாகவும் அரசிடம் சரணடைந்துள்ள 14000 விடுதலைப்புலிகள் தெரிவித்தி ருக்கிறார்கள். அவர்கள் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்ட வர்கள். ஆனால் நாங்கள் அவர் களை நல்ல மனிதர்களாக்கி புதிய வாழ்க்கை தொடங்க உதவி யிருக்கிறோம்.
புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த சிறார்களை ஒரு மாதத்திலேயே விடுதலை செய்தோம். 30 ஆண்டு காலம் பயங்கரவாதத்தால் இலங்கை சின்னா பின்னமடைந்தது. அப்போது இதை யாரும் பிரச்சினை யாக எழுப்பவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பயங்கரவாத செயல்கள் இலங்கையில் நடக்க
வில்லை. ஒருவரும் பலியாக வில்லை. அமைதி நிலவுகிறது. பயங்கரவாதிகளையும் மனம் திருந்த வைத்து ஈர்ப்பதுதான் எனது கொள்கை. அவர்களுடன் பேச முயற்சித்து வருகிறோம். ஆயினும் நாடு பிளவடைவதை ஒருகாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் ராஜபக்சே.
நிருபர்கள் கூட்டத்தில் காமன் வெல்த் தலைமைச்செயலர் கமலேஷ் சர்மா கூறியதாவது:
புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரின்போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுவது பற்றி இலங்கை மனித உரிமைகள் கமிஷனிடம் காமன்வெல்த் அமைப்பு பேசி வருகிறது. இந்த பிரச்சினைகளில் நல்ல தொரு முன்னேற்றத்தை இலங்கை எட்டும் என்கிற நம்பிக்கை உள்ளது.