

ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கான ஆவணத்தில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் (70) கையெழுத்திட்டுள் ளார்.
அமெரிக்காவின் 45-வது அதிப ராக டொனால்டு ட்ரம்ப், வாஷிங் டனில் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அப்போது பேசிய அவர், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அமெரிக்காவின் நலனுக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
சர்ச்சில் சிலை
இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் நேற்று தனது முதல் நாள் பணிகளைத் தொடங்கினார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தின்போது அதிபர் அலுவலகத்தில் இருந்த பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலின் மார்பளவு சிலை அகற்றப்பட்டது. புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன், வின்சென்ட் சர்ச்சிலின் சிலை நேற்று மீண்டும் அலுவலகத்தில் நிறுவப்பட்டது.
ஒபாமா ஆட்சியின்போது ‘ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட் டது. அந்த திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை புதிய அதிபர் ட்ரம்ப் தொடங்கி யுள்ளார். முதல்கட்டமாக ஒபாமா கேர் திட்டத்தின் சிரமங்களை குறைப்பது தொடர்பான ஆவணத்தில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டம் விரைவில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக அனைவருக்கான மருத் துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
எதிர்ப்பாளர்கள் கைது
அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதை கண்டித்து தலைநகர் வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் வாகனங்கள் எரிக்கப்பட்டன, கடைகள் சேதப்படுத்தப்பட்டன. 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். அமெரிக்கா மட்டு மன்றி ஐரோப்பிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகள், மற்றும் ஆஸ்திரேலியாவில் ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.