

குடியரசு தினத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரே நாளில் ரூ.18 லட்சம் நிதி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூகுள் ஹேங்அவுட் மூலம் ‘சுயராஜ்ஜியத்தைக் கொண்டாடு வோம்’ என்ற தலைப்பில் நிதி திரட்டினார். லண்டன், ஆம்ஸ்டர் டாம், டோக்கியோ, பாஸ்டன், வாஷிங்டன், சிகாகோ, பிலடெல் பியா உள்ளிட்ட 17 நகரங்களில் இருந்து அதிக அளவு மக்கள் நிதி வழங்கினர்.
ஆம் ஆத்மி கட்சிக்கு நடப்பாண் டில் பெறப்பட்ட நிதியில் ஒரே நாளில் பெறப்பட்ட 2-வது அதிகபட்ச தொகை இது என அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ரூ.40 லட்சம் வசூலானதே, நடப்பாண்டில் ஒரு நாளில் பெறப்பட்ட அதிகபட்ச நன்கொடையாகும்.