

கரீபியன் தீவுகளில் உள்ள ஹைதி நாட்டில், ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஒரு பாதசாரி உட்பட 33 இசை கலைஞர்கள் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "ஹைதி நாட்டின் கோனைவிஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுடன் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்பேருந்து சாலையிலிருந்த 2 பாதசாரிகள் மீது மோதியது இதில் ஒருவர் பலியானார்.
பின் அப்பேருந்து, அதே சாலையில் மூன்று குழுக்களாக பிரிந்து இசை நிகழ்ச்சியை நடந்திக் கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் மீது மோதியது. இதில் 33 பேர் பலியாகினர்.விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பொது மக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை தீயிட்டு கொளுத்தினர். எனினும் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், அப்பேருந்தில் பயணித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்றார்.