Last Updated : 21 Jun, 2016 10:24 AM

 

Published : 21 Jun 2016 10:24 AM
Last Updated : 21 Jun 2016 10:24 AM

சியோலில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்தில் என்எஸ்ஜி குழுவில் புதிய நாடுகளை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட மாட்டாது: சீனா வெளியுறவுத் துறை தகவல்

தென்கொரிய தலைநகர் சியோ லில் நடைபெற உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் குழு (என்எஸ்ஜி) கூட்டத்தில், புதிய நாடுகளை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படமாட்டாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத் திடாத சில நாடுகள் என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர விரும்புகின்றன. ஆனால் இது தொடர்பாக உறுப்பு நாடுகளிடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

என்பிடியில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது குறித்து எப்போதும் என்எஸ்ஜி கூட்டத்தில் பரிசீலித்ததே இல்லை. எனவே, வரும் 24-ம் தேதி நடை பெற உள்ள வருடாந்திர கூட்டத்தில் புதிய நாடுகளை சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

என்பிடியில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது குறித்து என்எஸ்ஜியின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது. இந்த நிலைப்பாடு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. என்பிடி-யில் கையெழுத்திடாத எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். இங்குள்ள வெளி யுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இத்துறை சார்ந்த உயர் அதிகாரி களை சந்தித்து இருதரப்பு உறவு கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அணுசக்தி அதிக அளவில் தேவைப்படுவதால், என்எஸ்ஜியில் இந்தியா சேர வேண்டியது அவசி யம் என்று அவர் எடுத்துரைத்தார். அப்போது சீனாவின் நிலைப் பாடு குறித்து அவரிடம் எடுத் துரைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்கக் கோரி கடந்த மே 12-ம் தேதி இந்தியா விண்ணப்பித்தது. இதுகுறித்து வரும் 24-ம் தேதி சியோலில் நடைபெற உள்ள அந்த அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

என்பிடியில் கையெழுத்திடாத காரணத்தால், இந்தியாவை என்எஸ்ஜியில் சேர்க்க சீனா உள் ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 16, 17-ம் தேதிகளில் சீனா சென்றிருந்த நமது வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதனிடையே, என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்றும் புதிய உறுப்பினரை சேர்ப்பது தொடர் பாக கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிதான் சுட்டிக்காட்டி வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் விண்ணப்பம்

என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தி இந்தியா விண்ணப்பித்த சில தினங்களில் (மே 19) பாகிஸ்தானும் விண் ணப்பித்தது. பாகிஸ்தானை சேர்க்க வேண்டும் என்று சீனா கட்டாயப்படுத்தாவிட்டாலும், உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியா புதிய உறுப்பினராவதைத் தடுக் கவே இத்தகைய முயற்சியை செய்து வருகிறது.

இந்தியா என்எஸ்ஜியில் சேர்ந்து விட்டால், அதன் அணுசக்தி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித் துவிடும் என்ற பாகிஸ்தான் கருது கிறது. இதன்மூலம் இந்தியாவின் அணு ஆயுதமும் மறைமுகமாக அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x