

நவீன கால மருத்துவத்துறையில் மிகவும் மோசமான, மிகவும் தீவிரமான நோயாக எபோலா உருவெடுத்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த நோய் குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அதன்மூலம் மக்களின் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்க முடியும் என்றும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மார்கிரெட் சான் கூறும்போது, "எபோலா நோய்த் தொற்றைத் தடுக்க மக்கள் தங்களின் அறியா மையால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பொருளாதார சமநிலை குலைவதற்கு 90 சதவீத காரணமாக உள்ளது" என்றார்.
மேலும், மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்போதைக்குச் சிறந்த நோய்த் தடுப்பு திட்டமாக இருக்கும் என்று அவர் கூறி யுள்ளார். இதற்கிடையே, அமெரிக் காவில் மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு எபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை டெக்சாஸ் மருத்துவமனையில் எபோலா நோய் தாக்கி இறந்து போன தாமஸ் எரிக் டன்கன் என்பவருக்கு பணிவிடை செய்யும் குழுவில் இவர் இருந்தார்.