

‘‘போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான டோவ் ரசாயன ஆலையை காப்பாற்ற கூடாது’’ என்று வெள்ளை மாளிகை இணையதளத்தில் விண்ணப் பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ‘யூனியன் கார்ப்பைட் இண்டியா லிமிடெட்’ ரசாயன தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இந்த ஆலையில் இருந்து விஷவாயு கசிந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இறந்ததாக கூறப்படு கிறது. எனினும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்ற சர்ச்சை உள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விஷவாயு கசிவால் ஊன மடைந்துள்ளனர்.
உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இன்றும் இது கருதப்படுகிறது. இதை யடுத்து யூனியன் கார்ப்பைட் நிறு வனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், விஷ வாயு கசிவுக்கு காரணமான நிறு வனத்தின் மீதோ, அதன் ஊரிமை யாளர்கள், அதிகாரிகள் மீதோ இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்கு சரியான இழப்பீடும் கிடைக்கவில்லை.
இந்த பயங்கரம் நடந்து 32 ஆண்டுகள் ஆன நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இணையதளத்தில் அதிபர் ஒபாமாவுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்சத் துக்கும் மேற்பட்டோர் ஆன்லை னில் கையெழுத்திட்டுள்ளனர்.
‘சர்வதேச சட்டத்தை உறுதி செய்யுங்கள்; டோவ் நிறுவனத்தை காப்பாற் றாதீர்கள்’ என்ற தலைப்பில் இணையதளத்தில் அனுப்பியுள்ள அந்த விண்ணப்பத்தில், ‘‘போபால் விஷவாயுவுக்கு காரணமான டோவ் ரசாயன நிறுவனத்தை (யூனியன் கார்பைட் நிறுவனத்தை டோவ் நிறுவனம் தற்போது வாங்கி விட்டது.) அமெரிக்க அரசு பாதுகாக்க கூடாது. 30 ஆண்டு களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. விஷவாயு கசிவுக்கு அந்த நிறு வனம்தான் பொறுப்பு’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ‘‘விஷவாயு கசிவு தொடர்பான வழக்கு போபால் நீதி மன்றத்தில் வரும் ஜூலை மாதம் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இரு நாட்டு ஒப்பந்தம் மற்றும் சர்வ தேச சட்டத்திட்டங்களின்படி நீதி மன்றத்தில் ஆஜராக டோவ் நிறுவன உரிமையாளர்களுக்கு அதிபர் ஒபாமா அரசு நோட்டீஸ் வழங்க வேண்டும்’’ என்று அந்த விண்ணப்பத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.