Last Updated : 06 Jun, 2017 03:10 PM

 

Published : 06 Jun 2017 03:10 PM
Last Updated : 06 Jun 2017 03:10 PM

2016-ம் ஆண்டு 7 இந்திய நிறுவனங்களுக்கு குறைந்த அளவில் எச்1பி விசாக்கள்: அறிக்கையில் தகவல்

அமெரிக்காவில் உள்ள 7 இந்திய முன்னணி நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு குறைந்த அளவில் எச்1பி விசாக்களைப் பெற்றுள்ளன. அதாவது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் 5,436 விசாக்கள் குறைந்துள்ளது என்று அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை என்ற லாப நோக்கல்லாத அமைப்பின் சிந்தனைக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது.

முன்னணி 7 நிறுவனங்களுக்கு 2016-ல் கிடைத்துள்ள 9,536 எச்1பி விசாக்கள் அமெரிக்க மொத்த உழைப்புச் சக்தியில் 0.006% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எச்1பி விசாக்கள் மூலம் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கிறது என்று அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. தேசிய அளவில் 160 மில்லியன் பணியாளர்களை நியமிக்கக் கூடிய ஒரு பொருளாதாரம் 10,000 பேர் பணியாற்றக்கூடிய ஒரு சூழலை அளவுக்கதிகமாக பிரச்சினைக்குட்படுத்தியுள்ளது என்று இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட எச்1பி விசாக்கள் 56% குறைந்துள்ளது. அதாவது 4,674 விசாக்களிலிருந்து 2015-16 காலக்கட்டத்தில் 2,040 விசாக்களாக குறைக்கப்பட்டுள்ளது.

விப்ரோ ஐடி நிறுவனத்துக்கு 52% விசாக்கள் குறைந்துள்ளது. 3,079-ல் 1,474 விசாக்களே கிடைத்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்துக்கு 16% விசாக்கள் குறைந்துள்ளது, அதாவது 2016-ல் 2,376 அனுமதிக்கப்பட்ட எச்1பி விசாக்களே கிடைத்துள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டில் 2,830 விசாக்களாக இருந்தது.

ஆனால் இந்த அறிக்கை, “ஏப்ரல் 2016-ல் விண்ணப்பிக்கப்பட்ட தொடக்க பணிநியமனங்களுக்கான விசாக்களுக்கே அனுமதி வழங்கப்பட்டதால், இந்நிறுவனங்களுக்கு எச்1பி விசாக்கள் குறைந்ததற்கு அதிபர் ட்ரம்ப் காரணமாக முடியாது” என்று கூறியுள்ளது.

2016-ல் எச்1பி விசாக்கள் பெற்ற நிறுவனங்கள்:

காக்னிசண்ட் (3,949), இன்போசிஸ் (2,376), டிசிஎஸ் (2040), ஆக்செஞ்ச்சர் (1889), ஐபிஎம் (1,068), விப்ரோ (1,474), அமேசான் (1,416), டெக் மகீந்திரா (1,228), கேப்ஜெமினி (1,164), மைக்ரோசாப்ட் (1,474), ஹெச்.சி.எல். அமெரிக்கா (1,041), இண்டெல் (1,030), டெலாய்ட் (985), கூகுள் (924), எல்&டி (870), பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (713), எர்னஸ்ட் அண்ட் யங் (649), ஆப்பிள் (631), சிண்டெல் (583), ஃபேஸ்புக் (472), ஆரக்கிள் (427), சிஸ்கோ (380), மைண்ட் ட்ரீ (327), கோல்ட்மான் சாக்ஸ் (287), யு.எஸ்.டி. குளோபல் (283), ஜேபி மோர்கன் சேஸ் (271), ஐகேட் (255), ஸ்டான்போர்டு (221), யாஹூ (206), மற்றும் கேபிஎம்ஜி (198).

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளின் தரவுகளை ஆராய்ந்த போது 25,000 அமெரிக்கப் பணியாளர்களும் ஒரேயொரு உயர் திறன் அயல்நாட்டு பணியாளரும் புதிய எச்1பி விசாத் திட்டத்தின் கீழ் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கக் கொள்கைகான தேசிய கழகம் அமெரிக்காவில் ஏப்ரல் 2017-ன் படி கணினி மற்றும் கணிதத்துறைகளில் வேலையின்மை விகிதம் 2.5% தான், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமான 4.4%-ஐ விட இது குறைவுதான் என்கிறது.

தொழிலாளர்கள் புள்ளிவிவரங்கள் கழகக் கணக்குகளின் படி 2020-ல் கூடுதலாக 1.4 மில்லியன் மென்பொருள் பணிகள் இருக்கும், கணினி தொடர்பான ஒட்டுமொத்த பணிகள் சுமார் 5 லட்சத்துக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறது.

80% எச்1பி விசா பணியாளர்களுக்கு சம்பளம் குறைவாக அளிக்கப்படுகிறது என்ற ட்ரம்ப் நிர்வாக புள்ளிவிவரங்களை பல்வேறு அறிக்கைகள் மறுத்துள்ளன.

மேலும் உயர் திறன் பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வர ட்ரம்ப் நிர்வாகம் திறந்த மனதுடன் இருக்க வேண்டு, அப்படியில்லையெனில் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பே இல்லாமல் போய் விடும் என்றே ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x