

இராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று கார் குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர்.
இராக்கில் அரசுப் படைகளுக் கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க கூட்டுப் படை களின் உதவியால் அரசுப் படைகளின் கை ஓங்கி வருகிறது. மோசூல் உட்பட ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை அரசுப் படை படிப்படியாக மீட்டு வருகிறது.
இதற்குப் பழிவாங்கும் வகை யில் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பாக்தாத்தின் சதார் சிட்டி பகுதியில் மிகப்பெரிய காய்கறி சந்தை உள்ளது. அங்கு ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி யது. இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பாக்தாதில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 7 போலீஸார் உட்பட 29 பேர் பலியாகினர்.
இராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்த பகுதியை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.