

இந்தியாவுடனான நட்புறவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தை யொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுடனான நட்புறவுக்கு ரஷ்யா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. இருநாட்டு உறவு மேலும் வலுப்படுத்தப்படும். பல்வேறு சர்வதேச பிரச்சினைகள், பிராந்திய பிரச்சினைகளில் இந்தியா ஆக்கப்பூர்வமாக பணி யாற்றி வருகிறது என்று தெரி வித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பன்காஜ் சரண் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ரஷ்யாவுடன் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. 1947 ஏப்ரல் 13-ம் தேதியே இரு நாடு கள் இடையே தூதரக உறவு துளிர்த்தது. அன்றுமுதல் இன்று வரை இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது.
விரைவில் இருநாடுகளும் இணைந்து கூட்டு பல்கலைக் கழகத்தைத் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை ஐஐடி கல்வி நிறுவனமும் ரஷ்யாவின் டாம்ஸ்க் பல்கலைக் கழமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.