

நியூயார்க்கில் உள்ள ஐநா சபை யின் தலைமையகத்தில், வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய தூதரகத்துடன், ஐநா வின் பொது தகவல் துறை இணைந்து, யோகா தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. ஐநா பொதுச்சபைத் தலைவர் மார்கன்ஸ் லைக்கிடாஃப்ட் மற்றும் தகவல் துறை துணைப் பொதுச்செயலாளர் கிரிஸ்டினா கல்லாக் உள்ளிட்டோர் நிகழ்ச்சி யில் பங்கேற்கின்றனர்.
‘ஈஷா பவுண்டேஷன்’ நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவும் நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா சனங்களை பயிற்றுவிக்க உள்ளார். இவர்களோடு, ஐநாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள், வெளியுறவு அதிகாரிகளும் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி சயது அக்பருதின் தெரிவித்தார்.
தெற்கு சூடான், காங்கோ லெபனான் உள்ளிட்ட நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள அமைதித் தூதர்களும் நிகழ்ச்சியில் பங்கேற் கின்றனர். ‘யோகாவை உடலுக் கான பயிற்சியாக மட்டும் கரு தாமல், புனிதமான கண்ணோட்டத் துடன் பார்க்கும் வகையில், இந் தாண்டு யோகா தின நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக, அக்பருதின் குறிப்பிட்டார்.
இதையொட்டி, விழாவுக்கு முந்தைய நாளான, 20-ம் தேதி முதல்முறையாக, யோகா குருக்கள் உடனான கலந்தாய்வு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் ஜக்கி வாசுதேவ் உட்பட பல்வேறு யோகா குருக்கள் பங்கேற்க உள்ளனர்.
ஐநா தலைமையக நிகழ்ச்சி களைத் தவிர, நியூயார்க்கில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் யோகா தின நிகழ்ச்சிகளை, 25 அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. மேம்ப்ரிட்ஜில் உள்ள மசாஷுட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலும் (எம்ஐடி) சிறப்பு யோகா தினம் கொண்டாடப்படுகிறது.