Published : 02 Jun 2016 10:09 AM
Last Updated : 02 Jun 2016 10:09 AM

செம்மை காணுமா செர்பியா?- 14

போஸ்னியாவின் முஸ்லிம்கள், செர்புகள் மற்றும் க்ரோட்டுகள் ஆகியோருக்கிடையே தோன்றிய பகை தீரவில்லை..

வரலாறு காணாத அதிசயமாக ஐ.நா.சபையின் அமைதிப்படை போஸ்னியாவில் டென்ட் அடித்தது. ஐ.நா.ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள்,

‘‘இவ்வளவு நடந்த பிறகும் நீங்கள் வேற்றுமை பாராட்ட லாமா?’’ என்று வெவ்வேறு தரப் பைச் சேர்ந்தவர்களைக் கேட்க, ‘‘இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க முடியுமா? ’’ என்று எதிர் கேள்வி கேட்டனர் மக்கள்!

போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஜோரன் ஜிந்த்ஜிக் என்பவர் போஸ்னி யாவின் பிரதமரானார். போஸ்னி யாவின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவர்தான்.

ஆனால் ஒரு சில ஆண்டு களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். மிலோசெவிக் ஆண்டபோதே அவருக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்திய ஜனநாயக வாதி இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படுகொலை போஸ் னிய மக்களை கவலையடையச் செய்தது.

மொத்தத்தில் இனவெறியும் மத வெறியும் எந்த அளவுக்கு மனிதர்களை கூண்டோடு சீரழிக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியது போஸ்னியா.

போஸ்னியாவை ஆண்ட முஸ்லிம் அரசு, இயங்காத நிலை ஏற்பட்டது. அங்குள்ள செர்பு பிரிவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியை அதிகரித்துக் கொண்டே வந்தனர். ஐ.நா. அமைதியை ஏற்படுத்துவதற்காக போஸ்னி யாவுக்கு அனுப்பிய அமைதிப் படையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப் போனால் இந்த அமைதிப் படையின் மீது கூட குண்டு வீச்சுகள் நடந்தன.

போதாக்குறைக்கு அந்தப் படையினரில் சிலரையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, “ஐ.நா. சபை தன் இடையூறை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தனர் செர்பு பிரிவினர்.

‘போஸ்னியாவில் அமைதி தேவை’ என்ற பொதுவான அறிக்கையையாவது மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து வெளியிட வேண்டும் என்ற ஜெர்மனியின் கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து செர்பு பிரிவினரை வெளிப்படையாகவே ஆதரித்தது ரஷ்யா. “ஐ.நா.வின் அமைதி முயற்சியில் எந்தப் பயனும் இல்லை. பேசாமல் அது தன் முயற்சி யிலிருந்து பின் வாங்கி விடலாம்” என்று பிரெஞ்சு அதிபர் வெளிப் படையாகவே விமர்சித்தார்.

இப்படி அமைதியை மேலும் மேலும் குலைக்கும் வழியில்தான் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த நிலையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன.

ஐ.நா.வின் ராணுவப் பிரதிநிதி போஸ்னியாவில் உள்ள முஸ்லிம் அரசு மற்றும் செர்பு பிரிவு தலைவர் ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ஒருவழியாக பலன் கிடைக்கத் தொடங்கியது. முதல் கட்டமாக ஒரு வாரம் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக் கொண்டனர் இரு தரப்பினரும். அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு போர் நிறுத்தத்தைத் தொடரவும் சம்மதித்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் இந்த அமைதி முயற்சியில் பங்கு உண்டு.

இருந்தாலும் பல விஷயங்கள் சங்கடத்தை ஏற்படுத்தின. இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொள்ள வோ, ஏன் ஒரே இடத்தில் சேர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ கூட மறுத்து விட்டனர்.

போஸ்னியாவின் தலை நகர் சர்ஜேவோவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் போஸ்னிய அதிபரும் அந்நாட்டு ராணுவத் தளபதியும். பிறகு அந்த ஒப்பந்தம் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பலே என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (அது ‘செர்பு பிரிவினரின்’ கோட்டை என்று வர்ணிக்கப்படும் இடம்).

அங்குள்ள போஸ்னிய செர்பு பிரிவினரின் தலைவரிடமும், அந்தப் பிரிவின் கமாண்டரிடமும் கையெ ழுத்து பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத் தில் ஐ.நா. தன் அமைதிப் பணி களை தொடர இருதரப்பும் ஒத்துக் கொண்டதோடு, வேற்று நாட்டு ராணுவம் போஸ்னியாவில் நுழையாமல் பார்த்துக் கொள்வ தற்கும் சம்மதித்திருக்கிறார்கள்.

“பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானத்துக்கு வரத் தயார்” என்று செர்பு பிரிவினர் கூறினாலும் போஸ்னியாவில் 51 சதவீத பரப்பாவது எங்கள் கைக்கு வர வேண்டும் என்ற தங்கள் அடிப்படை கோரிக்கையை சிறிதளவுகூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். ஏற்கெனவே போஸ்னியாவில் மூன்றில் இரு பங்கு பரப்பை செர்பு பிரிவினர் தங்கள் ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருந்தனர் என்பதும், போர் நிறுத்தத்துக்குக் கொள்கையளவில் ஒத்துக் கொண் டாலும் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்திலிருந்து அவர்கள் இம்மியும் பின்வாங்கத் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனினும் தொடர்ந்து சுமார் மூன்று வருடங்களாக நடந்து வந்த கடுமையான உள்நாட்டுக் கலவரம் தற்காலிகமாகவாவது நின்றது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x