

இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஐக்கிய நாடுகளின் சபை துணையாய் இருக்கும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உறுதியளித்துள்ளார்.
மூன்று நாள் சுற்றுப் பயணமாக இலங்கை வந்த ஐ. நா பொதுச் செயலாளர் பான் கீ முன் வியாழனன்று இலங்கை பிரதமர் சிறிசேனாவை சந்தித்துப் பேசினார்.
அந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியமர்வுக்கும், இலங்கையில் அமைதி நிலவவும் ஐக்கிய நாடுகளின் சபை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பான் கீ-முன் உறுதியளித்துள்ளார்.
மேலும் இலங்கை பிரதமர் சிறிசேனாவின் ஆட்சியில் இலங்கையில் எந்தவித கலவரமும் ஏற்படாமல் மக்கள் அமைதியான முறையில் வாழ்வதாக தன்னுடைய பாராட்டுகளை சிறிசேனாவுக்கு தெரிவித்தார் பான் கீ-மூன்.
தீவிரவாத சதி செயல்கள் இளைஞர் சக்திக்கு முன்னால் இரையாக்கப்படும்:
இலங்கை காலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பான் கீ-மூன் "இலங்கையிலுள்ள இளைஞர்கள்தான் வருங்காலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போகிறார்கள். இளைஞர்கள் சக்தி மகத்தானது. உலகில் நிலவும் தீவிரவாத சதி செயல்களை இளைஞர்கள் சக்திக்கு முன்னால் இரையாக்கப்படும்" என்றார்.