

இந்தியாவின் பதான்கோட் விமானப்படைத் தள தாக்குதலில் நெருங்கிய தொடர்புடைய தீவிரவாதி ஆப்கானிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார்.
கடந்த ஜனவரி 2-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளம் மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவருக்கு தொடர்பிருப்பது பாகிஸ்தான் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபர் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.