

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தின் மீது வேற்றுக் கிரக பறக்கும் தட்டு பறந்ததாக, இணையதளத்தில் பிரபலமடைந்து வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தெற்கு சார்லோட்டில் உள்ள போர்ட் மில் பகுதியில் குவாங் டிரான் என்பவர் கடந்த ஜனவரி 30-ம் தேதி, வானில் வேற்றுக் கிரக பறக்கும் தட்டு போன்ற ஒன்றைப் பார்த்துள்ளார். உடனடியாக அதனைத் தன் மொபைல் போனில் உள்ள கேமரா மூலம் வீடியோவாகப் பதிவு செய்தார். ஒரு நிமிடத்துக்குள்ளாக அது மறைந்து விட்டது. பின்னர் 2-வது முறையாக எடுத்த வீடியோவில் மற்றொரு வேற்றுக்கிரக பறக்கும் தட்டு போன்ற ஒன்று தெரிகிறது.
அது இடது புறமாகவும் பின் னர் வலது புறமாகவும் செல்கி றது. பார்ப்பதற்கு பயணிகள் பயணிப்பதற்கு ஏதுவானது போல் தெரிகிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கருத்துகளைப் பதிவு செய்து ள்ள பலரும் இது தொடர்பாக விவாதித்து வருகின்றனர்.
அது ஆளில்லா விமான மாகவோ, ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் பொம்மை யாகவோ இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.