

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற் பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு தெரி வித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட ஆய் வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2011 முதல் 2015 டிசம்பர் வரை சிரியாவில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இன்றளவும் அங்கு வாரந்தோறும் 50 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த அரசுப் படை வீரர்கள், நீதித்துறை வட்டாரங்களில் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்தக் குற்றச் சாட்டை அதிபர் ஆசாத் அரசு மறுத்துள்ளது.
சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக் கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி உள்ளனர்.