

இந்தியத் துணைத் தூதர் கைதால் இந்தியாவுடனான நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ராகடே பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டார்.
இந்தியத் துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு அதிர்ச்சி வெளியிட்ட வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலிடம் கண்டனத்தையும் பதிவு செய்தார்.
இந்நிலையில், தூதர் கைதால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்புவதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தை தொடர்பாக சட்ட அமலாக்கப் பிரிவு மூலம் அணுகி வருவதாக தெரிவித்தார்.