Published : 22 Feb 2017 09:56 AM
Last Updated : 22 Feb 2017 09:56 AM

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் தேர்வு

அமெரிக்காவின் புதிய பாது காப்பு ஆலோசகராக மெக் மாஸ்டர் தேர்வு செய்யப்பட் டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற வுடன் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டி னென்ட் ஜெனரல் மைக்கேல் பிளின் நியமிக்கப்பட்டார். ஆனால் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 வாரங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து வைஸ் அட்மிரல் ஹார்வர்ட் என்பவரை தேசிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்க ட்ரம்ப் விரும்பினார். ஆனால் அந்தப் பதவியை ஹார்வர்ட் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் லெப்டினென்ட் ஜெனரல் மெக்மாஸ்டரை புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் ட்ரம்ப் தேர்வு செய் துள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் அவர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக ட்ரம்ப் நிருபர்களிடம் பேசியபோது, ஆப் கானிஸ்தான், இராக் போர்களில் திறம்பட பணியாற்றியுள்ள மெக்மாஸ்டர் சிந்தித்து நிதானமாக செயல்படக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x