

ஆஸ்திரேலியாவில் மெல்ஃபோன் நகரில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஞாயிறன்று மெல்ஃபோன் நகரின் தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நடத்துள்ளது.
இதுகுறித்து மெல்ஃபோன் டெய்லி பத்திரிகை கூறும்போது, "கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் டாமி மேத்யூ மெல்ஃபோனிலுள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இத்தாலி நபர் ஒருவர் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் பாதிரியாரை தாக்கினார்.
மேலும் அந்த நபர் தேவாலயத்தில் உள்ளவர்களை நோக்கி 'மேத்யூ ஒரு இந்தியர் அவர் பிரார்த்தனை நடத்தக்கூடாது' என்று பலமாக கத்தினார்.
கேரள பாதிரியாரை கத்தியால் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கத்தியால் தாக்கப்பட்ட பாதிரியார் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்" என்றார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.