மகளுக்காக கருவைச் சுமக்கும் தாய்

மகளுக்காக கருவைச் சுமக்கும் தாய்
Updated on
1 min read

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் வசிக்கும் மூதாட்டி தனது மகளுக்காக வாடகைத் தாயாகி உள்ளார். பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இப்போது லோரினோவுக்காக அவரது தாயார் ஜூலியா நவோரா வாடகைத் தாயாகியுள்ளார். 58 வயதாகும் ஜூலியாவுக்கு மாத விலக்கு நின்று 12 ஆண்டுகள் ஆகின்றன. எனவே அவருக்கு 3 மாதங்களாக ஹோர்மோன் ஊசிகள் போடப்பட்டு மகள் லோரினாவின் கருமுட்டைகளும் செலுத்தப்பட்டன. முதல் முயற்சியிலேயே ஜூலியா கருதரித்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

குழந்தை மீதான ஆசையில் கர்ப்ப காலத்தில் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தனது தாய்க்கு மகள் லோரினோ அடிக்கடி பெரிய பட்டியலை வாசித்துக் காட்டி வருகிறார். அதற்கு அவரது தாய், நான் ஏற்கெனவே 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தவள். என்னுடைய பேரக் குழந்தையையும் ஆரோக்கியமாக பெற்றெடுப்பேன் என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in