தாய்லாந்தில் மழைக்கு 18 பேர் பலி

தாய்லாந்தில் மழைக்கு 18 பேர் பலி
Updated on
1 min read

தாய்லாந்தின் தென்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவிக் கிறது. வெள்ளத்துக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் ஆறுபோல் காணப்படுவதாகவும் பல இடங்களில் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 8 மாகாணங்களில் நிலைமை மோசமாகும் என்றும் எச்சரித்துள் ளது. நகோன் சி தம்மராத் மாகாணத் தலைகரில் உள்ள விமான நிலையம் வெள்ளப் பெருக்கால் மூடப்பட்டது. தாய்லாந்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை வறண்ட மற்றும் குளிர்ந்த வானிலை நிலவும். இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in