

இராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் ஊடகங்கள், "பாக்தாத்தின் மத்திய பகுதியிலுள்ள பிரபல ஐஸ் கீரிம் கடை அருகே திங்கட்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
குண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் பொறுப்பேற்பு
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இது ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.