மேலாண்மை பாணி – I - என்றால் என்ன?

மேலாண்மை பாணி – I - என்றால் என்ன?
Updated on
1 min read

நிர்வாகத் தன்மை, மேலாளரின் ஆளுமை, தொழிலாளிகளின் பண்பு, இவற்றைப் பொறுத்து மேலாண்மை பாணி (Management Style) மாறுபடும். நிறுவன அமைப்புமுறை, கலாசார மாற்றங்களினால் பழைய மேலாண்மை பாணி நீங்க, புதிய பாணிகள் உருவாகின்றன.

கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கம் செலுத்துகிற மேலாண்மை பாணி மாறி இப்போது எல்லோரும் ஒருங்கிணைந்து, செயல்படுகின்ற மேலாண்மை பாணி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பங்குகொள்கிற மேலாண்மை (Participative Management), கோட்பாடு X எதிரான கோட்பாடு Y (Theory X versus Theory Y), கோட்பாடு Z (Theory Y), முழு தர மேலாண்மை (Total Quality Management), சுற்றிவரும் மேலாண்மை (Management by Walking Around), குறிக்கோளுடன் மேலாண்மை (Management by Objectives), தொழிலாளர் மேம்பாட்டு மேலாண்மை (Employee Empowerment) என்ற பல மேலாண்மை பாணிகள் உண்டு.

Participative Management

நிறுவன செய்திகளை தொழிலாளர்களிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் முடிவெடுத்தலில் பங்கேற்கச் செய்வது Participative Management. தொழிலாளர்களை ஊக்கப்படுத்த, உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த விதமான மேலாண்மை உதவி செய்யும் என்று கூறப்படுகிறது. மேலாண்மையில் பங்கு கொள்ளக்கூடிய படிப்பு, திறன், அனுபவம், ஆளுமை தொழிலார்களிடம் எதிர்பார்க்க முடியாது என்ற வாதமும் உண்டு. அதேபோல் நிறுவனத்தில் அமைப்பு கலாசாரம் இதனை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் உண்டு.

Stephen P. Robbins என்பவர் இரண்டு வகை Participative Management முறையைப் பற்றிக் கூறுகிறார் – தொழிலாளர் குழு, மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு. தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவை அவ்வப்போது மேலாண்மை குழு சந்தித்து ஆலோசனை நடத்தவேண்டும். இரண்டாவது முறையில், மேலாண்மை குழுவில் நேரடியாக தொழிலாளர் பிரிதிநிதிகள் உறுப்பினர்களாக பங்கேற்பது.

Theory X versus Theory Y

Theory X என்பது ‘மக்கள் எப்போதும் சோம்பேறித் தனத்துடன், வேலையை வெறுக்கும் மனோபாவம் உடையவர்கள்’ என்ற அனுமானத்துடன் ஆரம்பிக்கிறது, எனவே, அவர்களை வேலை செய்ய வைக்கவேண்டும். தொழிலாளர்கள் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு, கட்டளைக்குப் பணிந்து, வேலை செய்வார்கள். அதே நேரத்தில் தொழிலாளர்களை உழைக்கத் தூண்ட வேண்டும், ஊதியம் கொடுக்கவேண்டும் என்றும் இந்த கோட்பாடு கூறுகிறது.

Theory Y என்பது ‘மக்கள் உழைப்பை நேசிக்கிறவர்கள், அவர்கள் தாங்களாகவே கட்டுப்பாட்டுடன் உழைக்க முன்வருபவர்கள், அவர்கள் பொறுப்புடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, நிறுவனத்திற்கு உழைக்கத் தயாராக உள்ளனர்’, என்ற அனுமானத்துடன் கூறுவதாவது, மக்களின் உற்பத்தித் திறனை நிறுவனத்தின் மேலாண்மை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in