Last Updated : 11 Aug, 2016 03:44 PM

 

Published : 11 Aug 2016 03:44 PM
Last Updated : 11 Aug 2016 03:44 PM

ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சிக்கு ட்விட்டர் பொறுப்பாகாது: அமெரிக்க நீதிமன்றம்

ஐ.எஸ் அமைப்பு வளர்வதற்கு ட்விட்டர் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டில் குடும்பம் ஒன்று ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டது. அச்சம்பவத்துக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ட்விட்டர் வலைப்பக்கத்தை உபயோகிக்க ட்விட்டர் நிர்வாகம் அனுமதி அளித்ததுதான் காரணம் என்று வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், "ட்விட்டர் தளமானது குறுந்தகவல்களாக தங்கள் எண்ணங்களை அதன் கணக்காளர்கள் பகிர்வதற்கு பயன்படுத்தபடுகிறது. இது தனி நபர் பேச்சுரிமை சார்ந்த சுதந்திரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் ட்விட்டர் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது:

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையிலன் படி ட்விட்டர் நிறுவனம், ஐ.எஸ் மற்றும் அதன் ஆதரவாளர்களின் ட்விட்டர் உபயோகத்தை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் உபயோகத்தில் பல கட்டுபாடுகளை கொண்டுவந்தாலும் ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கும் தனி நபர்கள் வெவ்வேறு கணக்குகளில் தொடர்ந்து ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் 20000-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கும் ட்விட்டர் கணக்குகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x