விராட் கோலியின் தோற்றம் கொண்ட பாகிஸ்தான் இளைஞர்: வைரலாகும் வீடியோ

விராட் கோலியின் தோற்றம் கொண்ட பாகிஸ்தான் இளைஞர்: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி போன்ற தோற்றத்தைக் கொண்ட பாகிஸ்தான் இளைஞர் ஒருவரது வீடியோ வைரலாகிவருகிறது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.

பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரிலுள்ள டோமினோஸ் பிட்சா கடை ஒன்றில் பணி செய்யும் கோலியை போன்ற தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்னெப் சாட் பயனாளர் ஒருவர் பெயர் குறிப்பிடாமல் அந்த இளைஞரை வீடியோ பதிவு செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

முதல் முறை அல்ல:

இதற்கு முன்னரும் பாகிஸ்தானில் இதே போன்று கோலியைப் போன்ற தோற்றம் கொண்ட இளைஞரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு

</p>

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in