

கென்யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மோடி அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.
மொசாம்பிக், தான்சானியா, தென் னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் கடைசி நாடாக கென்யாவில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளார்.
கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா வைச் சந்தித்து அவர் உரையாடினார். அப்போது, கென்ய சிறு குறு நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் துறைக்கு 449.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.302.1 கோடி) கடனுதவியை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார்.
அதிபர் கென்யாட்டாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “இருநாடுகளின் உறவில் பன்முக மேம்பாட்டு கூட்டுறவு முக்கியத் தூணாக விளங்கும்” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்தி யாவின் மதிப்பு மிக்க மற்றும் நம்பக மான கூட்டாளியாக கென்யா உள்ளது. கென்யாவில் புற்றுநோய் மருத்துவ மனை அமைக்கும் செலவை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்ளும். கென்யாவின் பொது சுகாதாரத்துக்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்கும்.கென்யாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளி இந்தியா. கென்யாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியா அளிக்கும் சுமார் ரூ.400 கோடி கடனுதவி மூலம் மின் திட்டம் மேற்கொள்ளப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நடப்பு ஆண்டில், இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கென்யாவில் இந்தியத் திருவிழா கொண்டாடப்படும்” என்றார்.
பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தம் தவிர, திருத்தப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை, இரண்டு கடன் நீட்டிப்புகள், விசா, குடியிருப்பு மனைகள் உள்ளிட்ட 7 உடன்படிக்கைகள் கையொப்பமாகின.