

இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நதிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பேர்ட் மற்றும் சர்வதேச வணிக அமைச்சர் ஈத் பாஸ்ட் வெளியிட்டனர்.
குஜராத் மாநிலத்துக்காரரான நதிர் படேல் (44), சிறுவயதிலேயே கனடாவுக்கு வந்துவிட்டார். இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னால் அவர் 2009 முதல் 2011 வரை ஷாங்காய் நகரத்தில் தூதரக உதவியாளராகப் பணியில் இருந்தார்.
கனடா அரசு செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது:
"நதிர் படேலை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதில் பெருமையடைகிறோம். பேர்ட் மற்றும் பாஸ்ட் ஆகிய இருவரும் வரும் 13 மற்றும் 14-ம் தேதி இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள். அதிலும், பாஸ்ட் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து, 17-ம் தேதி வரை மும்பை, டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்".