

தென்சீனக் கடலின் ஸ்பார்ட்லி பகுதியில் சீனாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை, அந்தப் பகுதி பிலிப்பைன்ஸுக்கு சொந்த மானது என்று சர்வதேச தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பளித்தது.
தென்சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
பிலிப்பைன்ஸ் அருகே ஸ்பார்ட்லி பகுதியில் 12 தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகள் மற்றும் 35 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கடல் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத் துள்ளது. இதை எதிர்த்து கடந்த 2013 ஜனவரியில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்தது.
அதில், ஸ்பார்ட்லி பகுதியின் ‘நைன் டேஷ் லைனுக்கு’ உட்பட்ட பகுதிகள் பிலிப்பைன்ஸுக்கு சொந்தமானவை, அவற்றை சீனா ஆக்கிரமித்து செயற்கை தீவுகளை உருவாக்கி வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பா யத்தின் 5 நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தென்சீனக் கடலின் நைன் டேஷ் லேனுக்கு உட்பட்ட பகுதியில் சீனாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அந்தப் பகுதி பிலிப் பைன்ஸுக்கு சொந்தமானது. அங்கு சட்டவிரோதமாக சீனா கட்டுமானங்களை எழுப்பக் கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
தீர்ப்பை ஏற்கமாட்டோம்
இந்த வழக்கு விசாரணையை ஆரம்பம் முதலே சீனா புறக் கணித்து வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, ஹேக் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்கமாட்டோம், இத் தீர்ப்பு சீனாவை எவ்விதத் திலும் கட்டுப்படுத்தாது என்று தெரிவித்தார்.
இதனிடையே தீர்ப்பு வெளியா னவுடன் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ நேற்று அமைச்சர வையின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடிப்படை யாக வைத்து சர்வதேச சமூகத்தின் மூலம் சீனாவுக்கு நிர்பந்தம் அளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போது, தீர்ப்பு விவரங்களை முழுமையாக ஆராய்ந்து வருகி றோம், அதற்கேற்ப முடிவு எடுப் போம் என்று தெரிவித்தார்.